எனது புதிய அமைச்சரவையில் பாதிப்பேர் பெண்கள்!

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு தான் வந்தால் தனது மந்திரிசபையில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெறுவார்கள் என ஹிலாரி கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி தரப்பில் டொனால்டு டிரம்பும் முன்னணியில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அங்கு மேரிலாந்து, பென்சில்வேனியா, டெலாவர், கனெக்டிகட், ரோட் தீவு ஆகிய 5 மாகாணங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியில் தேர்தல் நடந்தது.
முன்னதாக இந்த தேர்தலுக்காக ஹிலாரி கிளிண்டன், டவுன்ஹால் பிரசார கூட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர், “நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் எனது மந்திரிசபை அமெரிக்கா போல இருக்கும்.
அமெரிக்காவில் 50 சதவீதம் பேர் பெண்கள் அல்லவா? நான் சொல்வது சரிதானே?” என கேட்டார். இதன்மூலம் தனது மந்திரிசபையில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அவரது பிரசார நிர்வாகி ஜான் பொடஸ்டா, ‘இந்திய அமெரிக்கரான நீரா தாண்டனை லாரியின் மந்திரிசபையில் பார்க்க நான் விரும்புகிறேன்’ என கருத்து தெரிவித்த நிலையில், தனது மந்திரிசபையில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெறுவார்கள் என ஹிலாரி கூறி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Related posts:
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு நிதியுதவி செய்தவர்களை கைதுசெய்ய தீவிர நடவடிக்கை!
அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!
டோகோ ஜனாதிபதி இலங்கை வருகை!
|
|