ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு நிதியுதவி செய்தவர்களை கைதுசெய்ய தீவிர நடவடிக்கை!

Thursday, August 18th, 2016

கடந்த மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமானவர்களை பற்றிய பரவலான விசாரணையின் ஒரு அங்கமாக, துருக்கியின் பெருநகரான இஸ்தான்புல் முழுவதும் நிதித்துறை போலிசார் அதிகாலையில் டஜன்கணக்கான சோதனைகளை நடத்தியுள்ளனர்.

தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு நிதி வழங்கியது தொடர்பாக அரசாங்கத்தால் சந்தேகிக்கப்படும் நபர்களை குறிவைத்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது. 180க்கும் அதிகமான கைது உத்தரவு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றதிலிருந்து இதுவரை மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுத்துறையில் பணி செய்து வந்த 80 ஆயிரம் ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு அல்லது வேலையை இழந்துள்ளனர்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு, ஏற்கனவே நாடு கடத்தப்பட்ட மதகுரு ஃபெத்துல்லா குலன் முக்கிய மூளையாக செயல்பட்டார் என துருக்கி அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், அதனை இவர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: