ஊழல்களை மக்களே வெளிப்படுத்துவர்: கமல்ஹாசன்

Friday, July 21st, 2017

அ.தி.மு.க அரசாங்கத்தின் ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்விகளுடன் தகவல் அனுப்புங்கள் என நடிகர் கமல்ஹாசன் பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் கூறிய கருத்திற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் அறைகூவல் விடுத்தனர். இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் அறைகூவல் விடுத்துள்ளார். ஆனால், எப்போது ஹிந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தேனோ,  தெரிந்தோ தெரியாமலோ  அன்றே  நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். ஊழல்களை ஆதாரத்துடன் கூற வேண்டும் என அமைச்சர் கட்டளையிட்டுள்ளார். இந்நிலையில், ஆதாரங்களை இணையத்தளங்களில் அல்லது தங்களது வசதிக்கேற்ற ஊடகங்களில் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மக்களை கோருகின்றேன்.

மேலும், இந்த அரசாங்கத்தின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கூறுங்கள். ஆனால், உங்கள் தகவல்கள் எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும். இதன்மூலம், மக்கள் தற்கால அமைச்சர்களைவிட மாண்புமிக்கவர்கள் என்பதை புரிந்துக் கொள்ளட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: