ஊழலில் ஈடுபட்டால் சுட்டுக்கொலை : ஜனாதிபதி அச்சுறுத்தல்!
Wednesday, August 8th, 2018
ஊழலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை சுட்டுக் கொல்லப் போவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள காவல்துறையினரை சந்தித்த வேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“௪நீங்கள் இப்படியே மாறாமலிருந்தால் உங்களை நான் கொல்லுவேன். என்னிடம் சிறப்பு பிரிவொன்று உள்ளது அது உங்களை வாழ்நாள் முழுவதும் கண்காணிக்கும் நீங்கள் சிறிய தவறிழைத்தால் கூட உங்களை கொலை செய்யுமாறு கேட்டுள்ளேன். இவர்கள் அவ்வாறு கொல்லப்பட்டால் மனித உரிமைகள் என அலறிக் கொண்டு என்னிடம் வராதீர்கள் நான் உங்களை ஏற்கனவே எச்சரித்துவிட்டேன்..” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
எம்.எச்.370 விமானத்தின் சிதைவுகள் மடகஸ்காரில் மீட்பு?
தேவாலய தாக்குதல் முயற்சி: கைது செய்யப்பட்ட பெண்கள் மீது குற்றச்சாட்டு பதிவு!
இரட்டை இலையை கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு!
|
|
|


