உளவு பார்த்ததாக 3 சீன பத்திரிகையாளர்கள்களை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

Monday, July 25th, 2016

சீனாவின் அதிகாரபூர்வ அரசு செய்தி நிறுவனமான ‘சின்குவா’ சார்பாக 3 சீன பத்திரிகையாளர்கள் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். அச்செய்தி நிறுவனத்தின் டெல்லி தலைமை செய்தியாளர் வூ கியாங், அவருடன் பணியாற்றி வந்த லூ டாங், யான்காங் ஆகியோர் வரும் 31-ந்திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற கடந்த வாரமே உத்தரவிடப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

நாட்டை உளவு பார்ப்பதாக இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்ஸிகள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் சீன பத்திரிகையாளர்களை வெளியேற்றுவது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். பாதுகாப்பு ஏஜென்ஸிகளின் அறிக்கையின் பேரில் அந்த 3 சீன பத்திரிகையாளர்களின் விசாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு முன் இவர்களுக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்கு 6 ஆண்டுகாலம் வரை விசாக்கள் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இந்த விவகாரம் குறித்து சின்குவா செய்தி நிறுவனம் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிறுவனம் சீனாவில் முக்கிய நியூஸ் ஏஜென்ஸியாக இருந்து வருகிறது. இதன் தலைவர் சீன கம்யூனிஸ்டு கட்சியின் சென்ட்ரல் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: