உலோக வர்த்தகத்தில் 16 சதவிகிதம் உயர்வை கண்டது செம்பு!

Saturday, November 12th, 2016

கடந்த தசாப்தங்களிலே இல்லாத அளவில் மிகப்பெரிய விலை அதிகரிப்பை நோக்கி செம்பின் விலை சென்று கொண்டிருக்கிறது.

இலண்டன் உலோக வர்த்தக சந்தையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சரிவில் இருந்த செம்பின் விலை 16 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அமெரிக்க முழுவதும் புதிய கட்டுமானங்களில் முதலீடு செய்யப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் உறுதி மொழி, செம்பின் தேவையை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர, சீனாவில் மின்சாரத்துறைக்கு செம்பின் தேவை இருப்பதாலும் இந்த விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. சிலி, பெரு மற்றும் ஜாம்பியா போன்ற உலோகங்களை சுரங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு இது நல்ல செய்தி.

_92401379_gettyimages-511265444

Related posts: