உலங்குவானூர்தி விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
Friday, November 2nd, 2018
ஆப்கானிஸ்தானில் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் எனா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மோசமான காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
போப் தலைமையில் நீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வமதக் கூட்டம்!
இந்திய இராஜதந்திரத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை- தமிழக முதலமைச்சர்!
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவும் ஆபத்து - பிரதமர் மோடி விசேட ஆலோசனை !
|
|
|


