உலக பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸை முந்தி அமான்சிகோ ஒர்டீகா!
Saturday, September 10th, 2016
உலகின் மிகப்பெரும் பணக்காரரான மைக்ரோசொப்டின் இணை ஸ்தாபகரான பில்கேட்ஸை அமான்சிகோ ஒர்டீகா முந்தி உலகின் முதல் கோடீஸ்வரரானார்.
போர்ப்ஸ் சஞ்சிகையின் படி அவரின் சொத்து மதிப்பு 78 பில்லியன் அமெரிக்க டொலர்களாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி அவர் பில்கேட்ஸை முந்தியுள்ளார். மைக்ரோசொப்டின் இணை ஸ்தாபகரான பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 77.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அமான்சிகோ ஒர்டீகா, ஸ்பெய்னின் பிரபல ஆடை நிறுவனமான சாராவின் (இனிடெக்ஸ் குழுமம்) ஸ்தாகப தலைவராவார்.
அவரது நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளமையை அடுத்தே அவர் பில்கேட்ஸை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பிரான்ஸ் தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி மக்ரோனின் கட்சி
இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி!
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி!
|
|
|


