உலக சனத்தொகையில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு – உலக சுகாதார அமைப்பு கவலை!

உலக சனத்தொகையில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அவசர நிலை சேவை திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளவில் தற்போது வரையில் ஏராளமான மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 56 இலட்சத்து 95 ஆயிரமாக பதிவாகியுள்ளது. மேலும் 10 இலட்சத்து 45 ஆயிரம் பேர் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உலகளவில் தற்போது 8 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் இது உலக சனத்தொகையில் 10 இல் 1 என்ற அளவிற்கு அண்மித்த தொகையென்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|