உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: 2,064,668 பேர் பாதிப்பு – 137,108 பேர் பலி!

Thursday, April 16th, 2020

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த வைரசுக்குக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் இதுவரை எதுவித முன்னேற்றங்களும் காணப்படவில்லை என உலக சுகாதார தரப்புகள் தெரிவிக்கின்றன

இந்நிலையில், குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு  இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 2,064,668 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 1,42,929,641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறுப்படுகின்றது.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 508,826 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 137,108 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகி அதிக உயிரிழப்புகளை முறையே

அமெரிக்கா – 30,985  மரணப் பதிவுகளையும்

ஸ்பெயின் – 18,812 மரணப் பதிவுகளையும்

இத்தாலி – 21,645 மரணப் பதிவுகளையும்

பிரான்ஸ் – 17,188 மரணப் பதிவுகளையும்

ஜெர்மனி -3,804 மரணப் பதிவுகளையும்

இங்கிலாந்து – 12,894 மரணப் பதிவுகளையும்

சீனா – 3,346 மரணப் பதிவுகளையும்

ஈரான் – 4,777 மரணப் பதிவுகளையும்

துருக்கி – 1,518 மரணப் பதிவுகளையும்

பெல்ஜியம் – 4,440 மரணப் பதிவுகளையும்

பிரேசில் – 1,760 மரணப் பதிவுகளையும்

கனடா – 1,010 மரணப் பதிவுகளையும்

நெதர்லாந்து – 3,145 மரணப் பதிவுகளையும்

ஸ்வீடன் – 1,203 மரணப் பதிவுகளையும்  கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: