உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 28இலட்சத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் மொத்தமாக உலகளவில், 12கோடியே 82இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 10கோடியே 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
அத்துடன் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக பிரேஸில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விமானங்களுக்குக் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை!
ஆசிய கிண்ணம்: இறுதி போட்டியில் நுழைந்த வங்கதேசம்!
உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!
|
|