உறைபனியில் சிக்குண்ட சரக்கு கப்பல்: இரண்டு ஆண்டுகளாக போராடும் மீட்பு குழு!
Sunday, February 19th, 2017
ரஷ்யா அருகே 2 ஆண்டுகளாக பனிப்பாறைகளில் சிக்கியுள்ள கம்போடியா சரக்கு கப்பலை மீட்க பெருந்திரளான மீட்பு குழு ஒன்று களமிறங்கியுள்ளது.
ரஷ்யா அருகே Amur Bay பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பனியால் சூழப்பட்டு சிக்கியுள்ள கம்போடியா நாட்டு சரக்கு கப்பலை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழு ஒன்று அதிரடியாக களமிறங்கியுள்ளது.
கப்பலின் பாதி பாகம் கடலுக்குள் மூழ்கிய நிலையில் காணப்படும் அந்த கப்பலின் உள்ளே சூழ்ந்திருந்த கடல் வெள்ளத்தை மொத்தமாக வெளியேற்றும் நடவடிக்கையில் முதற் கட்டமாக அவர்கள களமிறங்கியுள்ளனர்.
குறித்த கப்பலானது உறைபனியால் சிக்குண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கொள்ளையர் கப்பலின் பாகங்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், நெருப்பிட்டு சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து கப்பலின் உரிமையாளர்கள் தற்போது குறித்த கப்பலை அங்கிருந்து மீட்டு கம்போடியா அல்லது ரஷ்யாவில் ஏதேனும் வணிகருக்கு விற்றுவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கப்பலின் பல பாகங்கள் தற்போது செயலிழந்த நிலையில் காணப்படுவதால் சிக்குண்ட பகுதியிலேயே கப்பலை வெட்டி எடுக்கவும் நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.


Related posts:
|
|
|


