முற்றுகை பகுதிகளுக்கு உதவி வாகனங்கள் பயணம்!

Tuesday, September 27th, 2016

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த நான்கு முற்றுகை பகுதிகளுக்கு சுமார் ஆறு மாதங்களின் பின் முதல் முறை உதவி வாகனங்கள் சென்றிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் உள்ள கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு சபதானி மற்றும் மதயா நகரங்களுக்கும் இத்லிப் மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டு போஹ் மற்றும் கெப்ரியா நகரங்களுக்கும் எழுபத்தி ஒரு உதவி லொரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதில் 60,000 பேருக்கு தேவையான உணவு, மருத்துவ பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. உதவி வாகனம் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஐ.நா கடந்த வாரம் சிரியாவுக்கான உதவி விநியோகங்களை 48 மணி நேரத்திற்கு இடைநிறுத்தி இருந்தது.

இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அரபு செம்பிறை சங்கம் இணைந்தே கிளர்ச்சியாளர் பகுதிக்கு 53 லொர்ரிகள் அனுப்பப்பட்டுள்ளன.சபதானி மற்றும் மதயா நகரங்களில் சுமார் 40,000 பேர் 2015 ஜூன் தொடக்கம் சிரிய இராணுவத்தின் முற்றுகையில் உள்ளனர்.

coltkn-09-27-fr-05155720741_4809880_26092016_ssk_cmy

Related posts: