உறுதிமொழியையும் மீறித் தொடரும் அமெரிக்க பிலிப்பைன்ஸ் கூட்டு இராணுவப் பயிற்சி!
Tuesday, October 4th, 2016
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அமெரிக்காவுடனான போர்ப் பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூறியபோதும், பிலிப்பைன்ஸும் அமெரிக்காவும் இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
இந்த கூட்டு இராணுவ பயிற்சிதான் அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் நடத்தும் கடைசி பயிற்சியாக இருக்கும் என்று அதிபர் டுடெர்டோ கூறினார். இதன் மூலம், தனது நாட்டை விட்டு அமெரிக்கப் படைகளை வெளியேற்றப் போவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுடன் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் டுடெர்டோவின் வார்த்தைகள் உறுதியான நடவடிக்கையாக மாறவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். இந்தப் போர் பயிற்சியில் இரு நாட்டைச் சேர்ந்த 2,000 இராணுவத்தினர் பங்கேற்கின்றனர்.

Related posts:
வான்தாக்குதலை முன்னதாகவே நிறுத்தியது ரஷ்யா!
காபுல் தாக்குதல் : 10 பேர் பலி!
இரண்டாக பிளவடைந்த படகு - 150 பேர் பலி? தேடும் முயற்சியில் மீட்புக்குழு - நைஜீரியாவில் துயரம்!
|
|
|


