உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு – 04 பேர் பலி!

Monday, July 29th, 2019

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவின் போது கண்மூடித்தனமாக ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் ‘பூண்டு பிரியர்கள்’ நடத்தும் உணவு திருவிழா அந்நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டின் மூன்றுநாள் திருவிழாவின் இறுதிநாளான நேற்று அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

இதன்போது திருவிழா கூட்டத்தில் ஒருவர் கண்மூடித்தனமாக மக்களை நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related posts: