உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்!
Saturday, March 23rd, 2024
உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரேனின் நீா் மின் நிலையம் உட்பட அந்நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் மீது, ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில்10 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி விளாடிமீர் செலன்ஸ்கி (Zelenskiy) குற்றம் சுமத்தியுள்ளார்.
மின் உட்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா 60 ட்ரோன்களையும், 90 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்
இதுபோன்ற சரமாரியான வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்குத் தேவையான வான்பாதுகாப்பு ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமீர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
000
Related posts:
|
|
|


