உக்ரைனின் சர்ச்சைக்குரிய பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் அதிகரிப்பு!

உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சர்ச்சைக்குரிய பகுதியில் மேற்கொள்ளபடும் போர் நிறுத்த மீறல்களில் தெளிவான அதிகரிப்பு காணப்படுவதாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் சிறப்பு கண்காணிப்பு சேவையில் ஈடுபட்டுள்ள ஒஎஸ்சி எனப்படும் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொனெஸ்க் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமையில், ஏறக்குறைய ஆயிரம் குண்டுவெடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்னர் நிகழ்ந்ததோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவான குண்டு வெடிப்புகளே நிகழ்ந்திருந்தன.
டொனெஸ்க் விமானத்தளத்திற்கும், அவ்டிவ்க்கா மற்றும் யாசிநுவாடாக்கு இடையில் வடக்கிலுள்ள ஒரு பகுதியிலும், பெரும்பாலான குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.அடுத்திருக்கும் லுஹான்ஸ் பிராந்தியத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களின் எண்ணிக்கையில், வெள்ளிக்கிழமை 10 என்பதிலிருந்து வார இறுதியில் 200 என அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு மண்டலத்தில் கவசப் போர் வாகனங்கள் மற்றும் ஆளில்லா ஏரியல் வாகனங்கள் இருந்தததையும் ஒஎஸ்சிஇ கவனித்துள்ளது.
Related posts:
|
|