உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கம் – அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு!
Monday, September 4th, 2023
உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா ஆக்கிரமிப்பு செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒலெக்சி ரெஸ்னிகோவ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார்.
இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சில் ‘புதிய அணுகுமுறைகளுக்கு” நேரம் வந்துள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம் அந்த நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் தாங்கி வெடிப்பு - தன்சானியாவில் 35 பேர் பலி!
கொரோனா வைரஸ் தாண்டவம்: இலங்கையில் பதிவானது முதல் மரணம்!
கொரோனா தொற்றின் எதிரொலி: குழந்தைகளுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது என யுனிசெவ் அதிர்ச்சி அறிக்கை!
|
|
|


