ஈரான் விமான தளம் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

Wednesday, August 17th, 2016

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுக்களுக்கு எதிராக வான் வழி தாக்குதல் நடத்துவதற்கு ரஷியா, இரானில் உள்ள ஒரு விமான தளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

சுமார் நாற்பது வருடங்களில் எந்த ஒரு வெளிநாட்டு ராணுவ படையும் , இரானில் உள்ள விமான தளத்தை பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். போராளிகளைக் கொன்ற ரஷியாவின் நீண்ட தூர சென்று குண்டு வீசும் விமான்ங்கள் மற்றும் ஜெட் போர் விமானங்கள் மேற்கு இரானின் ஹமெடன் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை ரஷியா, சிரியாவிலிருந்து தான் தாக்குதல்களை தொடுத்து வந்தது. 1979ஆம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து, ரஷியா இரான் இடையே நல்லதொரு உறவு இல்லை எனினும் சமீப காலமாக அதிகாரபூர்வமற்ற முறையில் இரு நாடுகளின் உறவில் சுமுகமான தொனி நிலவியது.

Related posts: