ஈரான் ஜனாதிபதியை சந்திக்க தயார் – டொனால்ட் ட்ரம்ப்

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருகானியை உத்தியோக பூர்வமாக சந்திக்க தயார் என வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சு வார்த்தைக்கு தயார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக இந்த மாத முற்பகுதியில், ஈரான் ஜனாதிபதி கடும் எச்சரிக்கைகளை விட்டிருந்தார்.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா, ரஷ்யா, மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டன. எனினும் கடந்த மே மாதம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே ட்ரம்ப், ஈரானிய ஜனாதிபதியை எந்தவித நிபந்தனையும் இன்றி சந்திக்க தயார் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எத்தியோப்பிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை - மெர்கல் எச்சரிக்கை!
நிர்கதியாக விடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்!
விரைவில் இந்தியா மீது பொருளாதாரத் தடை? - டிரம்ப் அறிவிப்பு!
|
|