ஈரான் சென்றது பிரிட்டிஸ் ஏயார்வேர்ஸ்!
Thursday, September 1st, 2016
பிரிட்டிஸ் ஏயார்வேஸ் நிறுவனம் இலண்டனில் இருந்து ஈரானுக்கான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த விமான சேவையை நான்கு ஆண்டுகளுக்கு பிரிட்டிஸ் ஏயார்வேர்ஸ் நிறுவனம் நிறுத்தியிருந்தது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசலை அடுத்து லண்டனுக்கும் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈரானுக்கு எதிராக சில கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டதை தொடர்ந்து பிரிட்டிஸ் ஏயார்வேர்ஸ் நிறுவனம் தமது விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த ஆண்டு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரித்தானிய தூதகரமும் திறக்கப்பட்டிருந்தது.
இதன்பிரகாரம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வாரம் ஆறு நாட்களுக்கு ஈரானுக்கான சேவைகளை பிரிட்டிஸ் ஏயார்வேஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதுடன், முதலாவதாக இன்று இரவு 9 மணிக்கு போய்ங் 777 விமானம் தெஹ்ரான் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


