ஈரான் ஏவுகணை சோதனையால் இஸ்ரேலுக்கு ஆத்திரம்!

Thursday, February 2nd, 2017

ஈரான் மேற்கொண்டிருக்கும் ஏவுகணை சோதனை ஒன்று ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தை அப்பட்டமாக மீறுவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை இம்மாதம் சந்திக்கும்போது ஈரான் மீதான தடையை புதுப்பிக்க கோரப்போவதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அணு சக்தி தொடர்பில் 2015இல் உடன்பாடொன்று எட்டப்பட்டு ஈரான் மீதான தடைகள் தளர்த்தப்பட்ட பின்னர் அந்நாடு இதுபோன்ற பல ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் தற்போது எவ்வகையான ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது மற்றும் அது ஐ.நா தீர்மானத்தை மீறுவதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

ஈரான் அணு ஆயுத திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பலத்தை பெறுவதை 2010 தீர்மானம் தடை செய்கிறது. எனினும் ஆறு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்ட அணு சக்தி உடன்படிக்கையை அடுத்து இந்த தீர்மானம் காலாவதியானது.

நெதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ஈரானின் எதிர்ப்பு செயல்களுக்கு பதில் கூறாமல் விடப்படாது” என்று எச்சரித்துள்ளார்.

Related posts: