ஈகுவடோரில் இரு பயங்கர நிலநடுக்கங்கள் !

தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஈகுவடோரின் வடமேற்கு பகுதிகளான குயினிண்ட் மற்றும் முயிஸின் ஆகிய பகுதிகளிலேயே 5.9 மற்றும் 6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சில இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஈகுவடோரில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவான பயங்கர நிலநடுக்கத்தில் 661 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட கொரியாவுக்கு மனிதநேய உதவி வழங்க செஞ்சிலுவை சங்கம் மீண்டும் அழைப்பு!
வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் தீர்மானம்!
பேஸ்புக் நிறுவனம் அதிரடி - 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்!
|
|