இஸ்ரேல் – ஹமாஸ் போர் – காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக மத்தியஸ்த்த நாடான கட்டார் அறிவிப்பு!.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக மத்தியஸ்த்த நாடான கட்டார் அறிவித்துள்ளது.
கட்டார் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்ததுடன் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளுக்கு மருந்து பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு இஸ்ரேல் மேலதிக அடிப்படை உதவி பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் எதிர்கால பேச்சுவார்த்தைகள் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு வழிவகுக்கும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதுவர், விவாதிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
|
|