Lite vehicle சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வைத்திய சான்றிதழ் அரச வைத்தியசலைகளில்!

Friday, February 7th, 2020

இலகு ரக வாகனங்களுக்கான (Lite vehicle) சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையில் வைத்திய சான்றிதழ் விநியோகிப்பதற்காக அரசாங்க வைத்தியசலைகளில் வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மோட்டர் வாகன போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதற்காக தற்பொழுது தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் வழங்கப்படும் வைத்திய சான்றிதழில் உள்ளடங்கும் வைத்திய பரிசோதனை நடத்துவதற்கான வசதிகளுடன் கூடிய 150 ஆரம்ப வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்திசாலைகள் தற்பொழுது நாடு முழுவதிலும் உண்டு.

இருப்பினும் அந்த வைத்தியசாலைகளின் மூலம் சம்பந்தப்பட்ட வைத்திய சான்றிதழ்களை வழங்கும் போது சேவை பயனாளிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கும் முடியாமல் உள்ளது.

இதனால் அரச வைத்தியசாலைகளில் இந்த பணிகளுக்காக தனியான அலகொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பட்டியலுக்கு அமைவான அரசாங்க வைத்தியசாலைகளின் மூலம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு சேவை பயனாளிகளுக்கு வைத்திய அறிக்கைகளை பெற்றுக்கொடுப்பதற்கும், அஅனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் அரச வைத்தியசாலைகளில் வசதிகளுடன் கூடிய பிரிவு ஒன்றை அமைப்பதற்காக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சரினால் அமைச்சரவைக்கு ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதி செய்யும் வகையில் வைத்திய கட்டளை சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் வைத்திய சான்றிதழை வழங்குவதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு இலக்கம் 8 இன் கீழான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைவாக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: