இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரம்: விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் – ட்ரம்ப்!
இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய சமாதான ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுடனான செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் சமாதான நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட வேண்டும்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் மனித உயிரின் மதிப்பை போற்றும் இரு நாடுகளாகும். எனது பார்வையில் இஸ்ரேல் குறித்த ஐ.நா. செயற்பாடுகள் முற்றிலும் நியாயமற்றதாகும். இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமெரிக்கா சமாதானத்தை ஊக்குவிக்கிறது. அதன்படி சிறந்த அமைதி ஒப்பந்தமொன்றையும் ஏற்படுத்த நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் என்றார்.
Related posts:
மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை - ஐ.நா சிறப்பு தூதர்!
சீர்குலைந்த போர் நிறுத்த அறிவிப்பு !
மாலைதீவு ஜனாதிபதியாக சாலிக் பதவி ஏற்பு!
|
|
|


