இஸ்ரேலில் வரலாற்று போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

இஸ்ரேலில் முன்னெடுக்கப்படும் வரலாற்றில் மிகப்பெரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
நீதித்துறையின் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக கடந்த பல வாரங்களாக அங்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹைஃபா உள்ளிட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் டெல் அவிவில் சுமார் 2 இலட்சம் பேர் வீதிகளில் இறங்கியதாக நம்பப்படுகிறது. சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை பாதிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எனினும் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அரசாங்கம் திட்டமிட்ட மாற்றங்கள் வாக்காளர்களுக்கு சிறந்த விடயம் என கூறுகிறது.
நேற்றையதினம் நாடு முழுவதும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை இஸ்ரேலிய ஹாரெட்ஸ் செய்தித்தாள் ‘நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்’ என்று அழைத்தது.
எதிர்க்கட்சியினர் நாடு ‘வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடியை’ எதிர்கொள்கிறது என்று விமர்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|