இலண்டனில் திடீர் வெள்ளம் – மக்கள் அவதி!

இலண்டனில் நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் திடீரென வெள்ளம்ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் பெய்த கடுமையான மழையினால் நோர்த் ஹரோ ரயில் நிலையத்துக்கு எதிரிலுள்ள வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தால் வீதிப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.
மேலும் நோர்த் ஹரோ ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் வெளியேறமுடியாது தவித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்துக்கு விரைந்து பயணிகளை மீட்டனர்.அதேவேளை ரயில் நிலையத்துக்கு முன்பாக பயணித்த கார்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது.
Related posts:
பருவகால மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக ஒப்பந்தத்திற்கு சீனா ஒப்புதல்!
பிரதமர் பதவிக்கு ஷின்ஸோ மீண்டும் போட்டி!
அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல் - 6 பேர் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!
|
|