இலங்கையின் நிலைமையே பிலிப்பைன்ஸூக்கு ஏற்படும்- பிலிப்பைன்ஸ் உதவி ஜனாதிபதி!

Monday, October 23rd, 2017

சீனாவிடம் அதிகளவில் தங்கியிருக்கும் நிலை ஏற்படுமானால் இலங்கைக்கு இன்று நேர்ந்துள்ள நிலையே பிலிப்பைன்ஸூக்கும் ஏற்படும் என்று அந்த நாட்டின் உதவி ஜனாதிபதி லெனி ரோப்ரேடோ எச்சரித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தமது திட்டங்களுக்காக புதிய நிதி வளங்களை தேடவேண்டிய அவசியம் உள்ளது.இதனைவிடுத்து சீனாவிடம் அதிகமாக தங்கியிருந்தால் இலங்கை சீனாவுக்கு முன் முகங்கொடுத்துள்ள பாரிய கடன்சுமை நிலைமையே பிலிப்பைன்ஸூக்கும் ஏற்படும் என்று லெனி குறிப்பிட்டுள்ளார்.சீனாவின் 175 பில்லியன் கடனுதவியில் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்தபோதே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.பிபிசி செய்தியின்படி இலங்கை சீனாவிடம் பாரிய கடன்பளுவை பெற்றிருக்கிறது.இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் 95 வீதமான வருமானங்கள் கடன்மீள் செலுத்துகைக்கே பயன்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: