இறக்குமதி வீழ்ச்சியை கண்டுள்ள சீனா!

Wednesday, August 10th, 2016

ஓராண்டுக்கு முந்தைய புள்ளிவிபரங்களோடு ஒப்பிடுகையில் இறக்குமதி 12 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ள பலவீனமான வர்த்தகப் புள்ளிவிபரங்களை எதிர்பாராதவிதமாக சீனா வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு தேவை குறைந்திருப்பது, உலக அளவில் பொருட்களின் விலை வீழ்ச்சி கண்டிருப்பது ஆகியவை சேர்ந்து, மாத இறக்குமதிகளில் ஆய்வாளர்களால் எதிர்பார்க்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிக வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்ந்து நான்காவது மாதமாக ஏற்றுமதிகளிலும் நான்கு சதவீதத்திற்கு மேலான வீழ்ச்சி காணப்படுகிறது.சீனாவின் நிலைமை உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடும் படியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா வளர்ச்சி வீதத்தை குறைந்திருப்பதால், உலக நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts: