இறக்குமதி தீர்வை அதிகரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி!
Saturday, March 3rd, 2018
அலுமினிய மற்றும் இரும்பு இறக்குமதிக்கான தீர்வைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகரிக்கவுள்ளார். இரும்புக்கு 25 சதவீதமாகவும் அலுமினிய பொருட்களுக்கு 10சதவீதமாகவும் இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இரும்பை ஏற்றுமதி செய்யும் அளவில், 4 மடங்கு அதிகரித்த அளவுக்கு 100 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் அமெரிக்கா நியாயமற்ற வர்த்தகத்தினால்பாதிக்கப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த அறிவிப்பின் பின்னர் அமெரிக்காவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களின் பங்குச் சந்தைப் பெறுமதி அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நைஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் மாயம்!
அமெரிக்க ஜனாதிபதிக்கு பச்சைக் கொடி காட்டினார் வட கொரிய அதிபர்!
இலண்டனில் 39 சடலங்கள் மீட்பு!
|
|
|


