இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் – வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டால் வடகொரியா மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா சபையின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா ஆறாவது முறையாக நேற்று அணுவாயுத சோதனை நடத்தியுள்ளது. வடகொரியா நேற்றுமுன்தினம் நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
இதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. சபையும் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா நடந்து கொண்டால் அந்நாடு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Related posts:
|
|