இரவுநேர கேளிக்கை விடுதியில் பாரிய தீ விபத்து!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 18 பேர் சிக்கி பலியாகியுள்ளதுடன் 5 பேர்காயமடைந்துள்ளனர்.
சீனாவில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதனை அமுல்படுத்துவதும் முறைப்படுத்தப்படவில்லை. இதனால் அந்நாட்டில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் தாதியர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பலியான சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய கேள்விகள் எழுந்தன. இந்த தீவிபத்து சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 21 பேரை கடந்த வருடம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுத போர் தொடுக்கும்! பாக்.பயங்கரவாதி மிரட்டல்!
ரஷியா - இந்தியா விமானப் பணியாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதி!
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு!
|
|