இரட்டைக் கோபுரத் தாக்குதலில் அரச குடும்பத்துக்குத் தொடர்பு -பயங்கரவாதி பரபரப்பு குற்றச்சாட்டு!

Sunday, September 18th, 2016

நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் சவுதி அரச குடும்பத்தினருக்குத் தொடர்பிருப்பதாக குவாண்டனாமோ சிறைக் கைதி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ல் பயணிகள் விமானத்தைக் கடத்திய அல்-கொய்தா பயங்கரவதிகள், நியூயார்க் நகரில் அமெரிக்க ராணுவத் தலைமையகம், உலக வர்த்தக மையம் உள்ளிட்டவைகள் இயங்கிவந்த கட்டடத்தின் மீது மோதச்செய்து தாக்குதலை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர்.

இந்த தாக்குதலில் சவுதி அரேபியாவுக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்கா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பாக கியூபாவில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் குவாண்டனாமோ சிறைக் கைதி ஒருவரின் வாக்குமூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கஸன் அப்தல்லா அல் சர்பி எனும் கைதி பேசியதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த வாக்குமூலத்தில், கடந்த 2001ஆம் ஆண்டு தாக்குதலுக்கு முன்பாக சவுதி அரேபியாவில் இருந்து வந்த அழைப்பு ஒன்றில் நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்துமாறு கூறப்பட்டதாக அந்த கைதி தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அழைப்பில் பேசிய நபர் சவுதியில் அரச குடும்பத்தினரை மரியாதையாக அழைக்கும் முறையிலான குறியீட்டை அந்த உரையாடலின்போது குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரிசோணா மாகாணத்தின் கல்லூரி படிப்பினை நிறைவு செய்த அல் சர்பியை, அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பி விமானத்தினைக் கடத்தி நியூயார்க் நகரைத் தாக்கும் திட்டத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சவுதித் தூதரகம் மறுத்துள்ளது.மட்டுமின்றி உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க உருவாக்கப்பட்ட குழுவும் சவுதி அரச குடும்பத்தின் மீது எவ்வித சந்தேககங்களையும் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

20-1426825266-twin-towert345

Related posts: