மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்!

Friday, April 6th, 2018

மிகப்பெரும் தவறிழைத்தமை குறித்து மன்னிப்புக் கோருவதாக பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர் மார்க் சகர்பேர்க் தெரிவித்துள்ளார்.

.பிரிட்டனின் கேம்பிரிஜ் அனலிற்றிகா நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரம் பூதாகரமானதை அடுத்து அவரது கருத்து வெளியாகிறது. இந்த நிறுவனம் எட்டரை கோடிக்கு மேற்பட்ட பேஸ்புக் பயனர்களின் தரவுகளைப் பெற்று டொனால்ட் ட்ரம்பின் பிரசார நடவடிக்கைகளுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தமது சமூக வலைதள சேவைகளை தீய நோக்கம் கொண்டவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் குறித்து போதியளவு கவனத்திற்கொள்ள தவறியதை ஏற்றுக் கொள்வதாக பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர் சகர்பேர்க் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: