இரகசியத்தை உடைத்த எய்ம்ஸ் டாக்டர் !

Saturday, October 8th, 2016

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது.

அப்பலோ மருத்துவமனை தனது அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் “டாக்டர் ஜி.கிலானி”, மயக்க மருத்துவ நிபுணர் “டாக்டர் அஞ்சன் த்ரிக்கா”, இதய சிகிச்சை நிபுணர் “டாக்டர் நிதிஷ் நாயக்” ஆகியோர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு அப்பலோ மருத்துவ நிபுணர் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு முதல்வரின் சிகிச்சை தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத எய்ம்ஸ் டாக்டர்,“முதல்வருக்கு இரத்தத்தில் கிருமிகள் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைகளே தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது” என கூறியள்ளார்.

தொடர்ந்து “22ஆம் திகதி முதல் 16 நாட்களாக ஐசியு-வில் வைத்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.பொதுவாக குருதியில் கிருமி காணப்பட்டால் முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைப்பாடு என்று ஆரம்பித்து பின்னர் நோயின் தாக்கம் அதிகமாகும்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வருக்கு அளித்து வரும் குறித்த சிகிச்சை சரியானதா? இல்லையா? என்பதை அறியவே தாம் வந்துள்ளதாகவும், விரைவில் முதல்வர் குணமடைய வேண்டும் என்பதே தனது எண்ணமும்” என பெயர் வெளியிட விரும்பாத எய்ம்ஸ் டாக்டர் கூறியுள்ளார்.

mutalvar-190x117

Related posts: