இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!

பாகிஸ்தான் பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இம்ரான் கானுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை பேசினார். அப்போது அவரிடம், பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதற்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாகிஸ்தானில் வரும் காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கும் என்று நம்புவதாகவும் மோடி குறிப்பிட்டார் என்று பிரதமர் அலுவலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரிட்டிஷ் அரசியின் 90 ஆவது பிறந்தநாள்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
உறுதியானது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் துருக்கி பயணம் !
|
|