இந்தோ பசுபிக்கில் தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளது – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரிக்கை!
Wednesday, September 20th, 2023
இந்தோ பசுபிக்கில் முன்னர் எப்போதையும் விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களிற்கு முன்னர் காணப்பட்டதை விட பிராந்தியத்தில் மோதலிற்கான அதிக ஆபத்து காணப்படுகின்றது எனஅவர் தெரிவித்துள்ளார்.
சிஎன்என்னின் கிறிஸ்டியனே அமன்பூருக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகம் பல வருடங்களாக பார்த்திராத ஆபத்தான மூலோபாய சூழ்நிலைகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த நாடும் ஆக்கிரமிக்காத எந்த நாடும் ஆக்கிரமிக்கப்படாத நிலையை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனாவை விட நிபா அடுத்த பேராபத்தாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் இரத்து - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர்!
அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டை குறைக்க திட்டம் - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற...
|
|
|


