இந்தோனேசியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, January 25th, 2019

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சுலவேசி மாகாணத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 3 ஆயிரத்து 321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related posts: