இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் நேற்று(06) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - துபாய் பத்திரிகை அதிர்ச்சி செய்தி!
சீனாவின் பிரம்மாண்ட மேம்பாலம் இந்த வருட இறுதிக்குள் திறப்பு!
பாகிஸ்தானில் கொடூர கொலை - காப்பாற்ற போராடிய பிரஜைக்கு அதியுயர் விருது!
|
|