இந்துக்கடவுள் விஷ்ணு அவமதிப்பு: டோனி மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Monday, September 5th, 2016

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி இந்து கடவுள் விஷ்ணுவை அவமதித்தாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான கிரிமினல் நடவடிக்கைகளை இரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை விஷ்ணு கடவுள் போல சித்தரித்து அட்டைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.இந்த விளம்பரத்தில் டோனிக்கு பல கைகள் இருப்பதை போலவும், அதில் ஒவ்வொரு கையிலும் பொருளை வைத்திருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொருட்களில் டோனி கையில் ஷூ ஒன்றும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த விளம்பரம் இந்துக் கடவுளை அவமதிப்பது போல உள்ளதாக ஆந்திராவில் உள்ள அனந்தபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த அனந்தபூர் நீதிமன்றம் டோனிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக டோனி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனந்தபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், டோனி மீதான கிரிமினல் நடவடிக்கைகளை இரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

 625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: