போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பது சாத்தியமற்றது – நாட்டு மக்களுக்கான உரையில் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

Wednesday, February 22nd, 2023

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பது சாத்தியமற்றது என ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

அதில், உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி, மேற்கத்திய நாடுகளே போருக்கு மூல காரணம் என்றும் குற்றம்சுமத்தியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் ஓராண்டை எட்டவுள்ள நிலையில், இன்று (21) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதிகாரத்தைப் பெற முயற்சிப்பதாக ரஷ்ய தூதுவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை, நேற்று உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யா மீது சுமத்தியுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ரஷ்ய ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

ரஷ்யா மக்களின் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றது மேற்குலகம், உள்ளுர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற முயற்சிப்பதாக புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவுடனான மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமான நியூ ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் ரஷ்யா பங்கேற்பதை நிறுத்துவதாகவும் புட்டின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள உக்ரைன், புட்டினின் உரை, ரஷ்யா ஒரு முடிவுநிலைக்கு வந்துள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ளது.

Related posts: