இந்திய வான் தாக்குதலில் 200 பாகிஸ்தானியர்கள் பலி?
Friday, September 30th, 2016
உரி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் நேற்றிரவு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து குண்டுமழை பொழிந்தன.
தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என இந்தியா விளக்கம் அளித்துள்ளது. அதே நேரம் எந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கையும் இல்லாத நிலையில் இந்தியா மேற்கொண்ட தாக்குதல் இது என பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்கள் தரப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
அதாவது லான்ச் பேட் எனப்படும், 8 ஏவு நிலைகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும், ஒவ்வொரு நிலையிலும் 20 முதல் 25 தீவிரவாதிகள் இருந்ததாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தகவல் தெரிவிக்கிறது.
இந்த தகவலின் அடிப்படையில் சுமார் 200 பேர் வரை இறந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இறந்தவர்கள் எண்ணிக்கை ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் தீவிரவாதிகள் என இந்தியாவும், தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் என பாகிஸ்தானும் கூறி வருகின்றன. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

Related posts:
|
|
|


