இந்திய பிரதமர் மோதியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு!
Thursday, January 26th, 2017
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்கா வருமாறு அழைத்துள்ளார்.இரு தலைவர்களுக்குமிடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலின் போது, இந்த அழைப்பை டிரம்ப் விடுத்துள்ளார்
“உலகெங்கும் உள்ள சவால்களை சமாளிக்க இந்தியாவை ஒரு உண்மையான நண்பனாகவும், கூட்டாளியாகவும்“ டிரம்ப் கருதுவதாக அமெரிக்கா கூறியது.
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டுறவை பலப்படுத்தும் வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்ததாக அமெரிக்கா கூறியது. தானும் டிரம்ப்பை இந்தியா வருமாறு அழைத்ததாக மோதி கூறினார்

Related posts:
மீண்டும் போட்டியிடுகிறார் விளாடிமிர் புதின்!
பிரதமர் பதவிக்கு ஷின்ஸோ மீண்டும் போட்டி!
உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!
|
|
|


