இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை – துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் தீர்மானம்!

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவைப் பெறாததால், இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் உள்ள தனது தூதரகத்தை மூட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் தூதரக உறவை பேண வேண்டிய அவசியமில்லை என ஆப்கானிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவின்மை, ஆப்கானிஸ்தானின் தேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இயலாமை, பணியாளர்கள் மற்றும் வளப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் இன்று முதல் தனது செயற்பாடுகளை இடைநிறுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் நட்பைக் கருத்தில் கொண்டு இந்த கடினமான தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கு தூதர் ஃபரீத் மாமுண்ட்சே தலைமை தாங்கினார்.
அவர் அஷ்ரஃப் கானி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் படைகளால் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய போதிலும் அவரது சேவைகளைத் தொடர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதுதான் இந்திய-ஆப்கன் உறவுகள் பற்றிய விவாதத்தின் முக்கிய அம்சமென்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|