இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி தெரிவிப்பு!
Monday, May 30th, 2022
உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் சார்ந்து செயல்படும் உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஐநா.சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடுநிலை வகித்ததால் இந்தியா, ஜேர்மனி இடையே உறவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
000
Related posts:
ஆபத்திலா ரஷ்யா...! ஒருமாதத்தில் விடை கிடைக்குமா?
பாடசாலை மாணவர்கள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு : 29 பேர் பலி!
2 ஆம் வகுப்பு வரை மாணவருக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


