இந்தியாவில் வறட்சியால் 10 மாநிலங்களில் 33 கோடி மக்கள் பாதிப்பு!
Wednesday, April 20th, 2016
மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வறட்சி பாதிப்பு குறித்து ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 7-ம் தேதி நடந்த விசாரணையின்போது, வறட்சியை அறிவிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 10 மாநிலங்களில் உள்ள 256 மாவட்டங்களில் வசிக்கும் 33 கோடி மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், நடப்பு நிதியாண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட 38500 கோடி ரூபாயில் இதுவரை 19ஆயிரத்து 555 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பட்டியலில் குஜராத் புள்ளிவிவரங்கள் ஏன் சேர்க்கப்படவில்லை? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
Related posts:
|
|
|


