காசா பகுதி வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்த்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Wednesday, October 18th, 2023

காசா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறித்த தாக்குதலில் இதுவரையில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்படும் ஏதிலிகள் பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் பாலஸ்தீன் பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

இவ்வாறான பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்றையதினம் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

அதேநேரம் அரபு நாடுகளின் தலைவர்களுடன் ஜோர்தானில் அவர் நடத்தவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதேவேளை, காசா பகுதியிலுள்ள வைத்தியசாலை மீதான தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: