இந்தியாவில் கோர விபத்து : 47 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் வீதியோரம் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
குறித்த விபத்தில் 47 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
Related posts:
பேருந்து வெடித்து சிதறியதில் 26 பேர் பலி!
மைக்ரோனேஷியா கடலில் விமானம் வீழ்ந்து விபத்து.!
பெண்களுக்கான தடையை தளர்த்தியது ஈரான் !
|
|