அமெரிக்கர்களே வெளியேறுங்கள் – ஜோ பைடனின் அறிவிப்பை அடுத்து பதற்றம்!

Friday, February 11th, 2022

யுக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பு காரணமாக யுக்ரேய்ன்- ரஸ்ய எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில், 2014ஆம் ஆண்டு யுக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை, ரஷியா கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.

யுக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. இதேவேளை கடந்த ஆண்டு நவம்பர் முதல் யுக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அதிகரித்து வருகிறது.

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் யுக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது.

இதனால், யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

எனினும் யுக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த சூழலில் தற்போது ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளன.

ரஷ்யாவின் சுமார் 30 ஆயிரம் இராணுவ வீரர்கள் இந்த கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

000

Related posts: